Homeசெய்திகள்சினிமா'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா!

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா!

-

- Advertisement -

நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக விரதம் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா!நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதன்படி டியர் ஸ்டுடென்ட்ஸ், டெஸ்ட், மண்ணாங்கட்டி, டாக்ஸி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. அதேசமயம் இவர், சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசையமைக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா!ஏற்கனவே நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மனாக நடித்த அசத்தியிருந்த நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 6) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில், சுந்தர். சி, நயன்தாரா, குஷ்பூ ,மீனா, ரவி மோகன், ஹிப் ஹாப் ஆதி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, ரெஜினா போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா!அப்போது மேடையில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்காக விரதம் இருக்கிறார் என்று கூறியுள்ளார். அதாவது ஏற்கனவே மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடித்து முடிக்கும் வரை நடிகை நயன்தாரா விரதம் இருந்ததாகவும் தற்போது இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக கடந்த ஒரு மாதமாகவே நயன்தாரா விரதம் இருப்பதாகவும் ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.

 

MUST READ