Homeசெய்திகள்சினிமாபோயஸ் கார்டனில் குடி புகுந்த நயன்தாரா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்...

போயஸ் கார்டனில் குடி புகுந்த நயன்தாரா… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…

-

- Advertisement -
    
கோலிவுட்டின் நட்சத்திர தம்பதி நயன்தாரா – விக்னேஷ் சிவன். நயன்தாராவும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர்.
சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனும் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.
இது தவிர இந்த நட்சத்திர தம்பதியினர் ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகின்றனர். நயன்தாரா நடிப்பில் டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும், நயன் ஸ்கின்கேர், ஃபெமி நயன், டிவைன் புட்ஸ், லிப்பாம் கம்பெனி என பல தொழில்களில் முதலீடு செய்துள்ளனர்.
இதுதவிர பட தயாரிப்பு, சினிமா என இதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும், இந்த நட்சத்திர தம்பதி தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வப்போது பல புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். ஏற்கனவே இது தன் கனவு வீடு என்று அவர் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீட்டில் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விரைவில் அவர் அந்த வீட்டுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் தான் த்ரிஷா, ரஜனிகாந்த் ஆகியோர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ