Homeசெய்திகள்சினிமாதனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நயன்தாரா!

தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நயன்தாரா!

-

- Advertisement -

நடிகை நயன்தாரா தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.தனுஷுடன் பேச்சு வார்த்தை நடத்தும் நயன்தாரா!

கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரெளடி தான் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் போது தான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் சில வருடங்கள் காதலித்து கடந்த 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கி அதனை ஒரு ஆவணப்படமாக வெளியிட்டது. இந்த ஆவணப்படம் என்ற தலைப்பில் கடந்தாண்டு நவம்பர் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது.தனுஷுடன் பேச்சு வார்த்தை நடத்தும் நயன்தாரா! இந்த ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் தனுஷின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தால் நடிகர் தனுஷ், நயன்தாராவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேசமயம் ஆவணப் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகளுக்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது தொடர்பான வழக்கில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் நடிகர் தனுஷின் மனுவை நிராகரிக்க கோரி மனுதாக்கல் செய்திருந்தது. ஆனால் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தனுஷுடன் பேச்சு வார்த்தை நடத்தும் நயன்தாரா! இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை சுமூகமாக முடிப்பதற்காக நடிகை நயன்தாரா, தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தையின் இறுதியில் நயன்தாராவிற்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை என்றால் ஆவணப்படத்தில் இருந்து நானும் ரெளடி தான் படப்பிடிப்பு காட்சிகளை நீக்கி விடுவார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ