Homeசெய்திகள்சினிமாநயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியீடு

நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியீடு

-

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் மாதம் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இணைந்து அவர் நடித்த இறைவன் திரைப்படமும் வெளியானது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கதாநாயகியை மையமாகக் கொண்ட புதிய படத்தில் நயன்தாரா நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஜெய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யராஜும் படத்தில் இருக்கிறார். ராஜா ராணிக்குப் பிறகு நயன்தாரா, சத்யராஜ் மற்றும் ஜெய் கூட்டணி மீண்டும் ஜோடி சேருகிறது என்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெடின் கிங்ஸ்லீ, ரேணுகா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் படத்தில் இணைந்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு அன்னபூரணி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ