Homeசெய்திகள்சினிமாபுதிய தொழில் தொடங்கிய லேடி சூப்பர்ஸ்டார்

புதிய தொழில் தொடங்கிய லேடி சூப்பர்ஸ்டார்

-

பிரபல நடிகை நயன்தாரா புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

சினிமாவில் இருக்கும் பெரிய நட்சத்திரங்கள் பெரும்பாலும் சினிமா மட்டுமின்றி அவர்களுக்கு பிடித்த ஒரு பிசினஸையும் நடத்தி வருகின்றனர். பல நடிகர்கள் உணவகங்கள், திரையரங்குகள், திரைப்பட தயாரிப்பு, ஆடை நிறுவனங்கள், நகை தொழில், விளம்பரங்கள், மாடலிங் என தங்களுக்கு விருப்பமான துறைகளில் தொழில் புரிகின்றனர்.
அந்த வகையில், நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘9 ஸ்கின்’ எனும் பெரில் ஸ்கின் கேர் நிறுவனத்தை தொடங்கினார். இந்த ஸ்கின் கேர் பிசினஸ் செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. நயன்தாரா தொடங்கியுள்ள இந்த புதிய பிசினஸுக்கு திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்களும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இது தவிர ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம், சாய் வாலா, லிப் பாம் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பெண்களுக்கான நாப்கின்களை உற்பத்தி செய்யும் ஃபெமி9 என்ற புதிய நிறுவனத்தையும் அவர் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மிகுந்த மன மகிழ்ச்சியோடு இந்த புதிய பயணத்தை தொடங்குவதாக பதிவிட்டிருந்தார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ