Homeசெய்திகள்சினிமாபள்ளி ஆசிரியையாக நடிக்கும் நயன்தாரா... டியர் ஸ்டூடண்ட்ஸ் படப்பிடிப்பில் பங்கேற்பு...

பள்ளி ஆசிரியையாக நடிக்கும் நயன்தாரா… டியர் ஸ்டூடண்ட்ஸ் படப்பிடிப்பில் பங்கேற்பு…

-

இதுவரை பல வேடங்களில் நடித்திருக்கும் நயன்தாரா மலையாளத்தில் உருவாகி வரும், டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் பள்ளி ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டார். அண்மையில் பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அட்லீ இத்திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தின் மெகா ஹிட்டைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நயன்தாரா பாலிவுட்டில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழிலும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது தமிழில் ‘தி டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில், நயன்தாராவும் ஒப்பந்தமாகி உள்ளார். டியர் ஸ்டூடண்ட்ஸ் என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பள்ளி ஆசிரியை வேடத்தில் நடிக்கும் நயன்தாரா, கொச்சியில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளார்.

MUST READ