Homeசெய்திகள்சினிமாநான் திருமணமே செய்திருக்கக் கூடாது..... விக்னேஷ் சிவன் குறித்து பேசிய நயன்தாரா!

நான் திருமணமே செய்திருக்கக் கூடாது….. விக்னேஷ் சிவன் குறித்து பேசிய நயன்தாரா!

-

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். நான் திருமணமே செய்திருக்கக் கூடாது..... விக்னேஷ் சிவன் குறித்து பேசிய நயன்தாரா!இதற்கிடையில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரெளடி தான் திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இருவரும் சில வருடங்கள் லிவிங் டு கெதரில் இருந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நான்கு மாதங்களில் உயிர் மற்றும் உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதன் பிறகும் விக்னேஷ் சிவன் ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருக்க மற்றொரு பக்கம் நயன்தாராவும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இருவருமே சமீப காலமாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில்தான் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அதாவது தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகை நயன்தாரா, “நானும் விக்னேஷ் வேணும் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. இப்போது கூட நான் அதை நினைத்து குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன். ஏனென்றால் நான்தான் அவரை இந்த உறவுக்குள் இழுத்தேன். அவருடைய வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்கென தனி ஒரு பெயர் இருந்திருக்கும். நான் திருமணமே செய்திருக்கக் கூடாது..... விக்னேஷ் சிவன் குறித்து பேசிய நயன்தாரா!இயக்குனர், பாடலாசிரியர் என அனைத்திலும் அவருக்கென தனி அடையாளம் இருந்திருக்கும். விக்னேஷ் சிவன் மிகவும் நல்ல மனிதர். அவரைப் போல ஒருவர் இருக்க முடியுமா? என்று என்னிடம் கேட்டால் அதற்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஒருவர் மீதுள்ள இருக்கும் மரியாதையும் அன்பும் அவர் சந்திக்கும் நெகட்டிவ் விஷயங்களால் காணாமல் போய்விடும். தனக்கு சமமாக இருப்பவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். நாங்கள் இருவரும் ஆடம்பரத்தையோ, வெற்றியோ நினைத்து திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ