Homeசெய்திகள்சினிமாநயன்தாராவின் அன்னபூரணி.... அசத்தலான டிரைலர் வெளியீடு!

நயன்தாராவின் அன்னபூரணி…. அசத்தலான டிரைலர் வெளியீடு!

-

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியாக நடித்து வரும் இவர் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்தும் வருகிறார். அது மட்டும் இல்லாமல் 9 ஸ்கின் என்ற அழகு சாதன பொருட்கள் சம்பந்தமான தொழிலையும் தொடங்கி, அதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இதற்கிடையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வரும் அன்னபூரணி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் இருவரும் நடித்துள்ளனர். கடந்த 2013 இல் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, ஜெய், சத்யராஜ் ஆகியோரின் கூட்டணி அன்னபூரணி படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்னபூரணி படத்தில் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அன்னபூரணி படத்தின் அசத்தலான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லரில் இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ளார் நயன்தாரா. ஆனால் இதற்கு அவருடைய பிராமண குடும்பம் தடையாக உள்ளது. வீட்டில் உள்ளவர்களிடம் தான் எம்பிஏ படிப்பதாக கூறிக்கொண்டு சமையல் கலை பயில்கிறார் நயன்தாரா. இதனிடையே கல்லூரியில் ஜெய்யுடன் காதல், நண்பர்களுடன் லூட்டி என கலகலப்பாக செல்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில் நயன்தாராவின் சமையல் கலைஞர் கனவால் ஏற்படும் பிரச்சனைகளும் அதன் விளைவுகளுமே படமாக இருக்கும் போல தெரிகிறது. மேலும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான சாப்பாடு என்னும் ஒரு விஷயத்தை மையமாக வைத்துக் கொண்டு அதில் இந்து, முஸ்லிம் பிரச்சினை, சைவ, அசைவ கருத்து வேறுபாடு பிரச்சனை ஆகியவற்றையும் எமோஷனலாக கூறியிருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இப்படம் கண்டிப்பாக கலகலப்பான அதே நேரத்தில் எமோஷனலான ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜை சொல்லும் படமாகவும் இருக்கும் என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிகிறது.

MUST READ