Homeசெய்திகள்சினிமாஇரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி

இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி

-

இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி

மும்பை விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏகே-62 படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து விஜய் சேதுபதி – அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிப்பில் பான் இந்தியன் படத்தை அவர் இயக்க உள்ளதாக தகவல் வருகிறது. கேங்ஸ்டர் படமாக இது உருவாக இருக்கிறதாம். பாலிவுட்டின் பிரபல எழுத்தாளர் ஒருவர் இந்தப் படத்துக்கு கதை எழுத இருப்பதாகவும், அதற்காக தற்போது விக்னேஷ் சிவன் மும்பையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, மும்பையில் விக்னேஷ் சிவன் இருக்கும் படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருந்தார். விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தின் உள்ளே இயக்குநர் விக்னேஷ் சிவனும், அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் நடந்து செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக கடந்த வருடம் அக்டோபரில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதை அடுத்து பல சர்ச்சை உருவானது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சுகாதாரத்துறை, விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி முறையான நடைமுறைகளை பின்பற்றியே குழந்தை பெற்றுக்கொண்டதாக அறிக்கை வெளியிட்டது.

 

MUST READ