டெஸ்ட் படப்பிடிப்பை நிறைவு செய்தார் நயன்தாரா
- Advertisement -
நடிகை நயன்தாரா டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதனை புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.
கோலிவுட்டை கடந்த பாலிவுட்டிலும் தனது முதல் படத்திலேயே உச்சம் தொட்டவர் நடிகை நயன்தாரா. ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நயன், முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்க அவர்முனைப்பு காட்டி வருகிறார். அதே சமயம் தமிழிலும் பல திரைப்படங்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். சினிமா, குடும்பம், தொழில் என மாறி மாறி சூப்பர் ஸ்டாராக அனைத்து துறைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான படம் அன்னபூரணி. இதைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் டெஸ்ட். இப்படத்தில் நயனுடன் மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்ளில் நடிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பாக வௌியானாலும், அண்மையில் தான் படத்திற்கு டெஸ்ட் என தலைப்பு வைத்து முதல் தோற்றத்தை பகிர்ந்தனர். இதில் நடிகை மீரா ஜாஸ்மினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். தமிழ்ப்படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த சசிகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
இந்நிலையில், டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நடிகை நயன்தாரா நிறைவு செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இந்த அறிவிப்பை அவர் வௌியிட்டுள்ளார்.