Homeசெய்திகள்சினிமாநயன்தாராவின் 'அன்னபூரணி' பட தோல்வியினால் 'மண்ணாங்கட்டி' படத்திற்கு வந்த சிக்கல்!

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ பட தோல்வியினால் ‘மண்ணாங்கட்டி’ படத்திற்கு வந்த சிக்கல்!

-

நயன்தாராவின் அன்னபூரணி பட தோல்வியினால் 'மண்ணாங்கட்டி' படத்திற்கு வந்த சிக்கல்!நடிகை நயன்தாரா கடந்த 2005இல் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் தனது பெயரை நிலை நாட்டினார். மேலும் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமாவில் தனது அந்தஸ்தை உயர்த்தி லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் கதைகளிலும் நடித்து வரும் நயன்தாராவின் சம்பளம் மட்டுமே 12 கோடி என்று கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் அன்னபூரணி. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.நயன்தாராவின் அன்னபூரணி பட தோல்வியினால் 'மண்ணாங்கட்டி' படத்திற்கு வந்த சிக்கல்!

அதேசமயம் நயன்தாரா மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு நடிக்கிறார். கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு இவர்களின் கூட்டணி மண்ணாங்கட்டி திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டியூட் விக்கி இயக்கி வருகிறார். ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவிலும் ஷான் ரோல்டன் இசையிலும் இப்படம் தயாராகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.நயன்தாராவின் அன்னபூரணி பட தோல்வியினால் 'மண்ணாங்கட்டி' படத்திற்கு வந்த சிக்கல்!

இந்நிலையில் அன்னபூரணி படத்தின் தோல்வியின் காரணமாக மண்ணாங்கட்டி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் டியூட் விக்கியிடம் படத்தின் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் எனவும், அவ்வாறு குறைத்தால் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு எடுக்க முடியும் எனவும் ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம். மேலும் நயன்தாராவிற்கும் சினிமாவில் மார்க்கெட் குறைந்து வருவதாகவும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ