Homeசெய்திகள்சினிமாநயன்தாராவின் அன்னபூரணி.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நயன்தாராவின் அன்னபூரணி…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

நயன்தாராவின் அன்னபூரணி பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் அன்னபூரணி. நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. பிராமண குடும்பத்தில் பிறந்து சமையல் கலைஞர் ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட நயன்தாரா பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி எவ்வாறு தனது லட்சியத்தை அடைகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் இப்படம் மிகக் குறைந்த அளவிலான வசூலை பெற்று தந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நயன்தாராவின் அன்னபூரணி.... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!மேலும் மண்ணாங்கட்டி, டெஸ்ட் போன்ற போன்ற படங்கள் நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ