Homeசெய்திகள்சினிமாபிரபல இயக்குநருடன் ஜோடி சேரும் நஸ்ரியா நாசிம்... வெளியானது புதுப்பட அப்டேட்...

பிரபல இயக்குநருடன் ஜோடி சேரும் நஸ்ரியா நாசிம்… வெளியானது புதுப்பட அப்டேட்…

-

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தனது கியூட் எக்ஸ்பிரெஷன் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். தமிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.அதையடுத்து ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’, தனுஷுடன் நையாண்டி, ந, வாயை மூடிபேசவும் என சில படங்களில் நடித்தார். இத்திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில் நடிகர் பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் நானி உடன் அடடே சுந்தரா படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. மேலும், இத்திரைப்படம் நஸ்ரியாவுக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது.

இந்நிலையில், நடிகை நஸ்ரியா பிரபல இயக்குநரும், நடிகையுமான பேசில் ஜோஷப்பிற்கு ஜோடியாக நடிக்கிறார். சூக்‌ஷமா தர்ஷினி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, எம்.சி.ஜித்தின் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கி உள்ளது.

MUST READ