Homeசெய்திகள்சினிமாமீண்டும் தமிழுக்கு வரும் நஸ்ரியா... ஃபீல் குட் காதல் கதையில் நடிக்க விருப்பம்... மீண்டும் தமிழுக்கு வரும் நஸ்ரியா… ஃபீல் குட் காதல் கதையில் நடிக்க விருப்பம்…
- Advertisement -

மோலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நஸ்ரியா நாசிமுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். தனது கியூட் எக்ஸ்பிரெஷன் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில் நடிகர் பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் நானி உடன் அடடே சுந்தரா படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு அப்டேட் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நஸ்ரியா மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமானார். பிரபல இயக்குநரும், நடிகையுமான பேசில் ஜோஷப்பிற்கு ஜோடியாக நடிக்கிறார். சூக்ஷமா தர்ஷினி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, எம்.சி.ஜித்தின் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக நடிகை நஸ்ரியா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், தமிழில் ஃபீல் குட் காதல் கதைகளில் நடிக்க விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.