Homeசெய்திகள்சினிமாநடிகர் பிரபாஸுக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்கள்!

நடிகர் பிரபாஸுக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்கள்!

-

- Advertisement -

நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமடைந்தார். கடைசியாக பிரபாஸ் சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் பிரபாஸுக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்கள்!விரைவில் சலார் 2 திரைப்படம் தொடங்க இருக்கிறது. அதேசமயம் நடிகர் பிரபாஸ் ராஜாசாப் எனும் படத்திலும் நடித்த வருகிறார். இதற்கிடையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898AD படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மே 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கிருஷ்ணரின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை மையமாக வைத்து தயாராகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், கிருஷ்ணராக பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.நடிகர் பிரபாஸுக்கு எதிராக கிளம்பிய விமர்சனங்கள்! இந்நிலையில் கடவுள் கிருஷ்ணராக நடிக்கும் பிரபாஸ் படப்பிடிப்பு தளத்தில் அசைவம் சாப்பிட்டு படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இது கடவுள் கிருஷ்ணரை அவமதிக்கும் செயலாக இருப்பதாக பிரபாஸுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

MUST READ