எச். வினோத் தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர். அடுத்ததாக இவர் கமல்ஹாசன் நடிப்பில் KH233 படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால் கமல் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தில் நடிப்பதால் KH233 படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கிடையில் எச். வினோத், யோகி பாபு நடிப்பில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து முடிப்போம் என்று திட்டமிட்டிருந்தார். அதேசமயம் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் 2 படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தான் வேறொரு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது எச் வினோத் , KH233, தீரன் அதிகாரம் இரண்டு, யோகி பாபு நடிப்பில் புதிய படம் இவை அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருக்கிறாராம்.
தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் D51 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விரைவில் முடித்துவிட்டு எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷ் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகப் போகும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.