நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாழ்த்து கிடைத்தது. அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். அதே சமயம் பில்லா படத்தின் மூலம் கவர்ச்சியாக நடித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். பின்னர் விஜய், சூர்யா, தனுஷ் , சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார்.
அந்த வகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த வகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் , மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல் பாலிவுட் வரைக்கும் சென்று ஷாருக்கானுடன் நடித்து பெயர் பெற்றார். இருப்பினும் கடைசியாக இவர் நடித்திருந்த அன்னபூரணி திரைப்படம் தோல்வி படமாக அமைந்ததால் நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது நயன்தாரா மாதவனுடன் இணைந்து டெஸ்ட் படத்திலும் யோகி பாபு உடன் இணைந்து மண்ணாங்கட்டி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாரா தற்போது படம் ஒன்றுக்கு பத்து கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் மொத்தமாக இவருடைய சொத்து மதிப்பு 200 கோடி எனவும் கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -