Homeசெய்திகள்சினிமாநெட்பிளிக்ஸ் பண்டிகை... வந்தது அதிரடி அறிவிப்பு...

நெட்பிளிக்ஸ் பண்டிகை… வந்தது அதிரடி அறிவிப்பு…

-

திரையரங்குகளை தாண்டி மக்களின் நேரத்தை கழிக்க உதவிய நிறுவனங்கள் ஓடிடி தளங்கள். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ5 என பல தரப்பட்ட தளங்களில் பல தரப்பட்ட திரைப்படங்களையும், இணைய தொடர்களையும் கண்டு ரசிக்க தொடங்கினர் மக்கள். ஓடிடி தளங்களில் முக்கியமான ஒன்று நெட்பிளிக்ஸ். அந்த வகையில் பொங்கலை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் மாபெரும் அதிரிபுதிரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களின் திரையரங்க வெளியீட்டுக்கான உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல, கீர்த்தி சுரேஷ் நடிப்பிில் உருவாகும் கன்னிவெடி படத்தின் உரிமையை பெற்றுள்ளது. கணேஷ் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

அதேபோல, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மகாராஜா படமும் வெளியாக உள்ளது. இது சேதுபதியின் 50-வது படமாகும். நிதிலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகிறது.

அதேபோல, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படம் ரிவால்டர் ரீதா படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புது படத்தின் உரிமையும் கைப்பற்றியது. அதேபோல, ஆர்ஜே பாலாஜி நடிக்கும் புதுப்படமான சொர்க்கவாசல் பட உரிமையை பெற்றது.

தொடர்ந்து இந்தியன் 2, தங்கலான், திரைப்படங்களின் உரிமையையும் கைப்பற்றியதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

MUST READ