Homeசெய்திகள்சினிமாவிரைவில் வெளியாகும் ஹீரமண்டி... பிரமாண்டமாக உருவாக்கம்...

விரைவில் வெளியாகும் ஹீரமண்டி… பிரமாண்டமாக உருவாக்கம்…

-

பாலிவுட் எனும் இந்தி திரையுலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர், இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். சரித்திரம் தொடர்பான திரைப்படங்கள் எடுப்பதில், அவர் வல்லவர் என்றே சொல்லலாம். அதேபோல, சரித்திர கதைகளில் காதலுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். அவர், பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம் லீலா, பாஜிரா மஸ்தானி, பத்மாவதி ஆகிய திரைப்படங்கள் பன்சாலியின் பெயர் சொல்லும் படங்கள். பிரம்மாண்டத்திற்கு குறைச்சல் இல்லாமல் இத்திரைப்படங்கள் அமைந்திருக்கும்.

அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கங்குபாய் காத்யவாடி. இப்படத்தில் விபச்சாரப் பெண்ணாக அலியா பட் நடித்திருப்பார். கங்குபாய் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உருவானது. இப்படம் மாபெரும் ஹிட் அடித்ததோடு, அலியா பட்டுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய தொடர் ஹீராமண்டி. இதில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ், சர்மின் சேகல், ரிச்சா சதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்தொடரின் டைட்டில் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த இணைய தொடர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது

MUST READ