Homeசெய்திகள்சினிமாபார்த்திபன் இயக்கும் புதிய படம்.... மெரினா கடற்கரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா!

பார்த்திபன் இயக்கும் புதிய படம்…. மெரினா கடற்கரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா!

-

- Advertisement -

பார்த்திபன் இயக்கும் புதிய படம்.... மெரினா கடற்கரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா!பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை முயற்சிப்பவர். அவருடைய எல்லா படங்களுமே வித்தியாசமான கதையில் உருவாக்கப்பட்டிருக்கும். பேசுகின்ற வார்த்தைகளிலும் சரி எழுதுகின்ற வரிகளிலும் சரி அனைத்திலுமே புதுமைகளை கையாளக் கூடியவர். அந்த வகையில் இவரை புதுமை பித்தன் என்று கூட அழைப்பார்கள். இவ்வாறு பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் பார்த்திபன். சமீபத்தில் பார்த்திபன் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பார்த்திபன் டீன்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குகிறார்.பார்த்திபன் இயக்கும் புதிய படம்.... மெரினா கடற்கரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா!
இப்படம் ஆனது குடிசைகளில் வாழும் ஏழை எளிய சிறுவர்களின் வாழ்வியல் கதைகளை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படுகிறது. பார்த்திபன் இப்படத்திலும் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சென்னை மெரினா கடற்கரையில் நடத்த பார்த்திபன் திட்டமிட்டுள்ளாராம். இவ்விழாவில் குடிசைகளில் வாழும் சிறியவர்களை தான் விஐபிகளாக அழைக்கப் போகிறாராம். நடிகர் பார்த்திபன் படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் புதுமையான விஷயங்களை முயற்சித்து பார்க்கிறார் என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

MUST READ