ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படம்! படக்குழு அறிவிப்பு
இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் திரைப்படம் ‘வீரன்’. இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு படகாராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் 2017ம் ஆண்டு வெளிவந்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படம் வசூல் ரீதியாகவும், விசர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, 2017ம் ஆண்டு வெளியான மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் திரைப்படம் ‘வீரன்’.
மிக சிறந்த காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
’சத்யஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘வீரன்‘ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தண்டர்காரன்’ பாடலின் புரோமோ வீடியோ வருகிற 31-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
Get ready to VIBE 🎉🥁
The first single of #Veeran – #Thunderkaaran Promo song is releasing on 31st MARCH 💥
A @hiphoptamizha Musical 🎶@ArkSaravan_Dir @editor_prasanna @deepakdmenon @kaaliactor @saregamasouth pic.twitter.com/p5RB2cyfLW
— Sathya Jyothi Films (@SathyaJyothi) March 29, 2023