Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான 'பிரதர்' படத்தின் புதிய போஸ்டர்!

ஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான ‘பிரதர்’ படத்தின் புதிய போஸ்டர்!

-

பிரதர் படத்தில் இருந்து ஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.ஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான 'பிரதர்' படத்தின் புதிய போஸ்டர்!

நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர். இந்த படத்தினை எம். ராஜேஷ் இயக்க ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். மேலும் பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், நட்டி நடராஜ், சீதா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதன் பின்னர் சமீபத்தில் மக்காமிஷி எனும் முதல் பாடலும் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இந்த படம் 2024 தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 10) தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி பிரதர் படக்குழு நடிகர் ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ