Homeசெய்திகள்சினிமாசபா நாயகன் படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

சபா நாயகன் படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

-

அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

தமிழில் சூது கவ்வும் படத்தில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நாயகன் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்கள் அசோக் செல்வனின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தன. நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டர், மன்மத லீலை உள்ளிட்ட படங்களிலும் அசோக் செல்வனின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து அண்மையில் அவரது நடிப்பில் வெளியான போர்த்தொழில் திரைப்படம் வசூலை குவித்தது. விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து, சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘சபா நாயகன்’. அதில், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், சாந்தினி சவுத்ரி, மயில்சாமி, மைக்கேல் , ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், சபா நாயகன் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சீமக்காரியே எனத் தொடங்கும் இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதி உள்ளார். சஞ்சித் ஹெக்டே இப்பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

MUST READ