கங்குவா திரைப்படம் தொடர்பாக ஜோதிகா முன்வைத்த கருத்துக்களை நடிகை அமலாபால் ஆதரித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகா திட்டமிட்டு படத்தை மோசமாக விமர்சிப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அதனை ஆதரித்து நடிகை அமலா பால் தனது கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
ஜோதிகாவின் கருத்துக்களை பகிர்ந்து குறிப்பிட்டுள்ள அவர், கங்குவா எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் திரை துறையின் புதிய சிந்தனைகளை கொண்ட படைப்பாற்றல் மற்றும் புதிய முயற்சியை வரவேற்க வேண்டும் எனக்கு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர்களின் புதிய முயற்சியையும் உழைப்பையும் பாராட்டுவோம் என ஆதரவு கரம் நீட்டி உள்ளார்.