அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2வது வாரத்தில் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்கை பட குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதன் பிறகு அஜித் தனது 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான செய்திகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பூஜையும் சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்ததாம். அதைத்தொடர்ந்து 2024 ஏப்ரல் மாதத்தில் ஏகே 63 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் அஜித்தின் ஏகே 64 படத்தை கே ஜி எஃப் படம் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் வேதாளம், வீரம், விஸ்வாசம், விவேகம் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஐந்தாவது முறையாக அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படம் ஏகே 65 படமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சிறுத்தை சிவாவின் கங்குவா பட ரிலீசுக்கு பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.