தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதாவது ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்தாக அமைந்திருக்கிறது. அந்த அளவிற்கு அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார் அஜித்தின் தீவிர ரசிகன் ஆதிக். இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 140 கோடியை கடந்திருப்பதாகவும், உலக அளவில் ரூ. 250 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித் அடுத்தடுத்த கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க குட் பேட் அக்லி படத்தின் கிளைமாக்ஸில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்பது போன்ற ஹிட் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் நடிகர் தனுஷும், அஜித்திடம் கதை சொல்லி இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் ஏகே 64 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன்படி வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 54 வது பிறந்தநாளை கூடுதல் ஸ்பெஷலாக மாற்ற ஏகே 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
- Advertisement -