Homeசெய்திகள்சினிமாநாளை மறுநாள் வெளியாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட டிரைலர்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாளை மறுநாள் வெளியாகும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட டிரைலர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நாளை மறுநாள் வெளியாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட டிரைலர்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தன்னுடைய 50வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் இவர் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன் ஆகியோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை உண்டர்பார் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். லியோன் பிரிட்டோ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். நாளை மறுநாள் வெளியாகும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட டிரைலர்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 21 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ