Homeசெய்திகள்சினிமாகாதலில் விழுந்த ரஜினியின் ரீல் மகள்... அவரே வெளியிட்ட பதிவு வைரல்...

காதலில் விழுந்த ரஜினியின் ரீல் மகள்… அவரே வெளியிட்ட பதிவு வைரல்…

-

  குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் 90-களில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடரான, மை டியர் பூதம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்தார் நிவேதா தாமஸ். இதைத் தொடர்ந்து கோலிவுட்டில் பல திரைப்படங்களில் அவர் நடித்திருப்பார்
கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார். இப்படத்தில் நிவேதாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அடுத்து, நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காத நிவேதா, தெலுங்கில் பல படங்களில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார்.
கோலிவுட்டில் விஜய்யுடன் குருவி, ஜில்லை ஆகிய படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரஜினிக்கு மகளாக தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை நிவேதா தாமஸ் தன் சமூக வலைதளப் பக்கத்தில் தனது காதலை பற்றி பகிர்ந்து உள்ளார். “It’s been a while…..but..Finally!” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனால், விரைவில் நிவேதா தாமஸ் தன் காதலரை அறிமுகப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

MUST READ