மலையாளத் திரை உலகின் பிரபல நடிகர் நிவின் பாலி நடிக்கும் 42வது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
நிவின் பாலி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர். அதற்கு முன்னதாக தமிழில் நேரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தங்க மீன்கள் பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கியுள்ளார். நிவின் பாலி உடன் இணைந்து அஞ்சலி சூரி மற்றும் பலர் நடிக்கும் உள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
கடந்த சில வருடங்களாக இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில், இறுதியாக இவர் நடித்திருந்த படவெட்டு, துறைமுகம் உள்ளிட்ட திரைப்படங்கள் நேர்மறையான விமர்சனங்களை பெற்று தந்தது.
அதைத்தொடர்ந்து நிவின் பாலி தனது 42 படமான ‘NP42’ இல் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தை ஹனீப் அடெனி இயக்கியுள்ளார். இதில் கணபதி, ஜாபர் இடுக்கி, வினய் ஃபோர்ட், பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஹெய்ஸ்ட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்திற்கு ராமச்சந்திரா பாஸ் & கோ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.