Homeசெய்திகள்சினிமாமுதன்முறையாக நிவின் பாலி உடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி!

முதன்முறையாக நிவின் பாலி உடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி!

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய ‘2018’ என்ற திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, குஞ்சாக்கா போபன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெருமழையினால் நடைபெற்ற வெள்ளம் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தற்போது உலகளவில் 90க்கு கோடிக்கும் மேல் வசூல் செய்து எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. விரைவில் 100 கோடியை தாண்டும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஜூட் ஆண்டனி ஜோசப் கடந்த 2014 ஆம் ஆண்டு நிவின் பாலி இயக்கத்தில் ஓம் சாந்தி ஓசனா படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜூட் ஆண்டனி ஜோசப் மீண்டும் நிவின் பாலி உடன் இணைந்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் நித்யா மேனன் உடன் 19(1) (a) என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். விஜய் சேதுபதிக்கு கேரளா ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைப்பதால் அவரும் மலையாளத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் நிவின் பாலி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து முதன்முதலாக நடிக்க இருக்கின்றனர்.

MUST READ