Homeசெய்திகள்சினிமாப்பா🔥 வெறித்தனமா இருக்கே... டப்பிங்கில் மிரட்டும் நிவின் பாலி, சூரி, அஞ்சலி!

ப்பா🔥 வெறித்தனமா இருக்கே… டப்பிங்கில் மிரட்டும் நிவின் பாலி, சூரி, அஞ்சலி!

-

- Advertisement -

நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் சூரி நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நேரம், ரிச்சி ஆகிய படங்களை அடுத்து மீண்டும் இந்தப் படத்தின் மூலம் நிவின் பாலி நேரடியாக தமிழில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்திலிருந்து அருமையான அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அஞ்சலி, நிவின் பாலி மற்றும் சூரி ஆகியோர் வெறித்தனமாக டப்பிங் பேசுகின்றனர். காட்சிக்கு ஏற்ப உணர்ச்சிகளைக் கொட்டி குரல் கொடுக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ