நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ராமச்சந்திரா பாஸ் & கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
நிவின் பாலி மலையாளத் திரை உலகின் பிரபல நடிகராக வலம் வருபவர். இவர் படவெட்டு, துறைமுகம் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு தமிழில் ஏழு மலை ஏழு கடல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தனது 42 வது படமான ராமச்சந்திரா திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை ஹனீப் அடேனி இயக்கியுள்ளார். மைக்கேல் படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ராமச்சந்திரா பாஸ் & கோ படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் ஜூனியர் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிவின் பாலி மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டு கேரளா பகுதியில் நடைபெற்றது. இதில் நிவின் பாலி உடன் இணைந்து ஜாபர் இடுக்கி, வினய் போர்ட், மமிதா பைஜூ, அர்ஷா பைஜூ மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் புலம்பெயர்ந்த திருட்டு கதை களத்தில் உருவாகியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நிவின் பாலி செம மாஸாகவும், ஸ்டைலாகவும் காணப்படுகிறார். மேலும் இந்த படம் வருகின்ற ஓணம் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.