Homeசெய்திகள்சினிமாமிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு..... 10 லட்சம் நிதி உதவி வழங்கிய சூர்யா,...

மிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு….. 10 லட்சம் நிதி உதவி வழங்கிய சூர்யா, கார்த்தி!

-

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், தற்போது சென்னையை விட்டு நகர்ந்து சென்றாலும் இன்று முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலி பட்டணத்திற்கு இடையே தீவிரப் புயலாக மாறி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு..... 10 லட்சம் நிதி உதவி வழங்கிய சூர்யா, கார்த்தி!

இந்த புயலினால் ஏற்பட்ட அதி கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதித்துள்ளது. புயலின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை, விமான சேவை, பேருந்து சேவை போன்றவைகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்பு படையினர் குழு பத்திரமாக மீட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்களை முகாமில் தங்க வைத்து சில சமூக ஆர்வலர்கள் உணவுகளையும் வழங்கி வருகிறார்கள். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என பலரும் நம்மை பாதுகாக்க யாரேனும் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு..... 10 லட்சம் நிதி உதவி வழங்கிய சூர்யா, கார்த்தி!இவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து முதற்கட்டமாக பத்து லட்சம் நிதி உதவி அளித்துள்ளனர். இருவரும் தங்களின் ரசிகர் மன்றங்களின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நடிகர்களான இவர்களை போல் பணமும், நல்ல குணமும் இருப்பவர்கள் தாமாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அனுப்பி உதவி செய்யும்படி எங்கள் APC நிறுவனத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். உங்களின் இந்த சிறிய உதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிதும் பயன்படட்டும்.

MUST READ