Homeசெய்திகள்சினிமாதமிழ்நாட்டில் மட்டும் இல்ல, கர்நாடகாவிலும் மாஸ் காட்டும் அஜித்..... 'விடாமுயற்சி'- யை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

தமிழ்நாட்டில் மட்டும் இல்ல, கர்நாடகாவிலும் மாஸ் காட்டும் அஜித்….. ‘விடாமுயற்சி’- யை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் இல்ல, கர்நாடகாவிலும் மாஸ் காட்டும் அஜித்..... 'விடாமுயற்சி'- யை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!மேலும் இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நடிகர் அஜித்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தான் அஜித்தின் 62 வது படமாக உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. எனவே அஜித்தையும், விடாமுயற்சியையும் கொண்டாடி தீர்ப்பதற்காக ரசிகர்கள் காலை முதலே திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் வகையில் விடாமுயற்சி படத்தின் சிறப்பு காட்சிக்கு இன்று ஒரு நாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் மதுரை, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு பிரம்மாண்ட பேனர்கள் வைத்து, மேளதாளத்துடன் ஆடிப்பாடி, பட்டாசு வெடித்து, பாலாபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். அடுத்தது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகா, பெங்களூரு போன்ற இடங்களில் அஜித்துக்கு மிகப்பெரிய பேனர் வைத்து மாலைகள் அணிவித்து ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ