Homeசெய்திகள்சினிமாசாதி பெயரை கேட்காமல் இருப்பதும் அரசியல் தான்... இயக்குநர் வசந்த பாலன் கருத்து...

சாதி பெயரை கேட்காமல் இருப்பதும் அரசியல் தான்… இயக்குநர் வசந்த பாலன் கருத்து…

-

- Advertisement -
சாதி பெயரை கேட்காமல் இருப்பதும், பெயரின் பின்னால் சாதி பெயரை சேர்க்காமல் இருப்பதும் அரசியல் தான் என்று இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

அங்காடித் தெரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக பிரபலம் அடைந்தவர் வசந்த பாலன். முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் வசந்த பாலன். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றதோடு, நடிகை அஞ்சலிக்கும் திரையுலகில் ஏறுமுகமாக அமைந்தது. ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்த பாலன், வெயில் படத்திற்காக தேசிய விருதை வென்றார். நீண்ட இடைவௌிக்கு பிறகு அண்மையில் வசந்த பாலன் படம் இயக்கினார். அநீதி என்ற அத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது இணைய தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். தலைமைச் செயலகம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் கிஷோர், பரத் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அவருடன் ரம்யா நம்பீசன், ஸ்ரேஷா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த இணைய தொடர் உருவாகி உள்ளது.

 

இந்த தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடாமல் இருப்பதும், சாதி பெயரை கேட்காமல் இருப்பதும் அரசியல் தான் என்று தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆண்டுகளில் சுமார் 7 திரைப்படங்கள் மட்டுமே அவர் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ