Homeசெய்திகள்சினிமா”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”  செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்

”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”  செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்

-

”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”  செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை உழைத்தால் காசு, திறமை இருந்தால் போதும்: என்னிடம் நல்ல கதைகள் வருகிறது, ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமைவதில்லை என நடிகர் பரத் வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிரசாந்த் முருகன் இயக்கத்தில், பரத், அஞ்சலி நாயர், அபிராமி, பவித்ரா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்‘ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் பரத், நடிகை அபிராமி, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”  செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்

இத்திரைப்படம் குறித்து மேடையில் பேசிய நடிகை பவித்ரா லட்சுமி, பல இடங்களில் ஆண்களை ஒரு மாதிரியாகவும் பெண்களை ஒரு மாதிரியாகவும் நடத்துவார்கள்.

கதாநாயகிகளை பற்றி பேசும் போது அந்த பொண்ணு என்று தான் சொல்லுவார்கள் ஆனால் அறிமுக நாயகனாக வரும் ஆண்களை ஹீரோ சார் தான் சொல்லுவார்கள். ஆனால் முதல் முறையாக படபிடிப்பு தளத்தில் இருந்த அனைத்து பெண்களையும் மேம் என்று மரியாதையாக அழைத்தார் இயக்குனர்.

”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”  செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்

பின்னர் நடிகை அபிராமி பேசுகையில், சில கதைகளை கேட்கும் போது மட்டும் தான் எப்படியாவது பண்ண வேண்டும் என்று நினைப்போம் அப்படி நினைத்த படம் இது தான்.இந்த கதை அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படம்.

இந்த கதையில் அபிராமிக்கு திருநங்கை மகள் கதாபாத்திரம் ஒன்று உள்ளது என்று இயக்குனர் சொல்லும் போது இயக்குனரிடம் இந்த கதாபாத்திரத்திற்கு உண்மையான திருங்கையை நடிக்க வைத்தால் தான் இந்த கதையில் நடிக்க ஒப்புக் கொள்வேன் என்று கூறினேன்.

ஹேமா கமிட்டி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்கான மேடையில் இல்லை. பேச வேண்டியவர்கள் பேச வேண்டும் என கூறி அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு ஈக்குவாலிட்டி கொடுக்கப்படுகிறதா..? என்ற கேள்விக்கு ஈக்குவாலிட்டி என்பது  மிகப் பெரிய வார்த்தை அதை பேசுவதற்கான மேடை இதுவல்ல என்றார்.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்

தொடர்ந்து நடிகர் பரத் பேசுகையில் மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து சந்தோஷப்படும் நபர்கள் மிகக் குறைவு.

நிறைய படங்களில் நான் கதாநாயகனாக தான் மட்டும் நடித்துள்ளேன் ஆனால் தற்போது ரசிகர்கள் கதையின் முக்கியத்துவத்தை பார்க்கிறார்கள்.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பு பட்ஜெட்டை பொறுத்து தான் அது பெரிய படமா சின்ன படமா என முடிவு செய்யப்படுகிறது. ஆனால் படம் வெளியான பிறகு சின்ன படமாக இருந்தால் கூட கதை நன்றாக இருந்தால் பெரிய படமாக மாறுகிறது.

அதற்கு உதாரணமாக பல திரைப்படங்கள் சமீபத்தில் வந்துகொண்டிருக்கிறது. அது போன்றே  தான் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் கதையை பார்க்கிறேன்.

சில நடிகர்கள் கதையை தேர்ந்தெடுக்கும் போது யார் தயாரிப்பாளர், எந்த டீம் என்று கதையை தவிர மற்ற அனைத்தையும் கேட்கிறார்கள். ஆனால் கதையை யாரும் கேட்பதில்லை, கதை தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது.

ஒரு படம் நம்மால் ஓட வேண்டும், இல்லையென்றால் ஓடும் படத்தில் நம்ம இருக்க வேண்டும் என்று கூறினார்.

”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”  செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்

 

நேபோடிசம் ஸ்டேஜை நான் தாண்டி விட்டேன், இப்ப இருக்கக்கூடிய நடிகர்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். நான் சினிமாக்குள் வரும் பொழுது சினிமா ஓபனாக இருந்தது.வாரிசு நடிகர்கள் அழுத்தம் அந்த அளவிற்கு இல்லை.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை உழைத்தால் காசு, திறமை இருந்தால் போதும். என்னிடம் நல்ல கதைகள் வருகிறது ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமைவதில்லை.

இரண்டு மாதத்திற்கு முன்பு அருமையான ஒரு கதையை கேட்டேன், ஆனால் தயாரிப்பாளரின் விருப்பம் வேறொரு நடிகர் மீது இருந்ததால் அந்த கதை என்னை விட்டு போய் விட்டது.இப்படி தொடர்ந்து நடப்பதால் நான் அடுத்த லெவலுக்கு செல்ல முடியவில்லை எனக்கு கூறினார். எனக்கு எந்த பேராசையும் இல்லை, முதலில் நாம் நம்மை  சந்தோஷமாக வைத்துக் கொண்டாலே இளமையாக இருக்கலாம் என்று மனம் திறந்து பேசினார்  நடிகர் பரத்.

”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்”  செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்

இப்படத்தின் தயாரிப்பாளர் பேசுகையில், என்னிடம் தன்னம்பிக்கை இருந்தது காசு இல்லை, இந்த படத்தின் பூஜையே வித்தியாசமாக நடந்தது. நண்பனிடம் காசு கேட்டிருந்தேன் கடைசி நேரத்தில் இல்லை என்று சொல்லிவிட்டான். அப்போது என் கையில் 700 ரூபாய் மட்டும் தான் இருந்தது அதிலும் சாமி படம் பூ வாங்கிவிட்டேன் தேங்காய் வாங்குவதற்கு கூட காசு இல்லை.

அதேபோல கதையை அபிராமியிடம் சொல்லி அட்வான்ஸ் தருவதாக ஒப்புக்கொண்டோம் அப்போதும் ஒரு நண்பனிடம் கடன் கேட்ட போது நான்கு நாட்கள் கழித்து தரேன் என்று சொல்லிவிட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் ஆன்லைனில் லோன் போட்டோம் அதுவும் சரியாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார்கள் என தன்  சங்கடமான சூழ்நிலையை  பகிர்ந்து கொண்டார் தயாரிப்பாளர்.

MUST READ