ஓபன்ஹெய்மர் திரைப்படம் 7 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளது.
கடந்த ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான படம் தான் ஓபன் ஹெய்மர். இந்த படத்தில் சிலியன் மர்பி, எமிலி பிளன்ட், மாட் டாமண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு லுட்விக் கோரண்சன் இசையமைக்க ஹோய்தே வான் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்து விமர்சகர்களும் வாயடைத்துப் போயினர். அந்த அளவிற்கு படத்துடைய மேக்கிங் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்துமே ரியலிஸ்டிக்காக இருந்தது. உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்த படம் பலரின் பாராட்டுகளை பெற்று தற்போது ஆஸ்கர் வரை சென்றுள்ளது. அந்த வகையில் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் ஹெய்மர் திரைப்படம் 7 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது. அதன்படி சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த எடிட்டிங், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
.