அமெரிக்காவில் இன்று ஆஸ்கர் விழா
95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று இரவு தொடங்குகிறது.
சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருதுகள் வழங்கும் விழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்திய மணி நேரப்படி மார்ச் 14-ஆம் தேதி திங்கள் காலை 5.30 மணி முதல் காலை 8.30 வரை ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெறும் இந்த விருது விழாவில் பல இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். பலருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் இந்திய சினிமாவிலிருந்து, ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் தேர்வு ஆகியுள்ளது. அதேபோல, சிறந்த ஆவணப் படம் பிரிவில் ஆர் தட் ப்ரீத்ஸ் படமும், அடுத்து சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் செல்லோ ஷோ படமும், த எலிபன்ட் விஸ்பரர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் தேர்வு ஆகியுள்ளது.
இந்நிலையில், இந்த 4 விருதுகளுக்கான போட்டியில் எந்த இந்தியப் படம் ஆஸ்கர் விருதை வெல்லப்போகிறது என இந்தியா சினிமா மட்டுமன்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.