Homeசெய்திகள்சினிமாபா. ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜி.வி. பிரகாஷ், பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும் படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் ஜி.வி. பிரகாஷ், ரிபெல், கள்வன், இடி முழக்கம், டியர், கிங்ஸ்டன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ஜி.வி பிரகாஷ். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அகிரன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பா. ரஞ்சித், ஏற்கனவே பல படங்களை தயாரித்துள்ளார். அடுத்ததாக பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள J. பேபி திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தையும் பா ரஞ்சித் தான் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ