பாட்டல் ராதா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குனர் பா. ரஞ்சித் கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்தது வேட்டுவம் எனும் திரைப்படத்தை இயக்கப் போகிறார். அதேசமயம் இவர் ஒரு தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி தற்போது பாட்டல் ராதா எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஜோக்கர் படத்தில் நடித்திருந்த குரு சோமசுந்தரம் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், மாறன், பாரி இளவழகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிறார். ரூபேஷ் ஷாஜி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பாட்டல் ராதா திரைப்படம் 2025 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியாகும் காரணத்தால் பாட்டல் ராதா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பா. ரஞ்சித் தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாட்டல் ராதா’…. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
-