Homeசெய்திகள்சினிமாநடிகர் விக்ரமை நான் ரொம்ப கொடுமைப்படுத்தினேன்..... இயக்குனர் பா. ரஞ்சித்!

நடிகர் விக்ரமை நான் ரொம்ப கொடுமைப்படுத்தினேன்….. இயக்குனர் பா. ரஞ்சித்!

-

- Advertisement -

பா.ரஞ்சித், விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விக்ரமை நான் ரொம்ப கொடுமைப்படுத்தினேன்..... இயக்குனர் பா. ரஞ்சித்!இந்த படமானது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் உருவாகி இருக்கிறது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் எங்கும் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 5) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய பா. ரஞ்சித், நடிகர் விக்ரமை மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறியிருக்கிறார்.

அதாவது தங்கலான் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு ஒருமுறை விபத்து ஏற்பட்டதன் விளைவாக அவருக்கு விலா எலும்பு உடைந்தது. அந்த சமயத்தில் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த பிறகு நடிகர் விக்ரமை ரீ ஷூட்டிற்கு அழைத்தபோது உடனே ஒப்புக்கொண்டார் எனவும் அவருக்கு விலா எலும்பு உடைந்திருந்த போதிலும் அவருக்கு வலிக்கும். ஆனாலும் நான் ஆக்ஷன் காட்சிகளில் ஒன் மோர் கேட்டு மிகவும் கொடுமைப்படுத்தி இருக்கிறேன். சாரி விக்ரம் சார். என்று பேசியுள்ளார் பா. ரஞ்சித்.

MUST READ