Homeசெய்திகள்சினிமாபா. விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'அகத்தியா'.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா. விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘அகத்தியா’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

பா. விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் அகத்தியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பா. விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'அகத்தியா'.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!பா. விஜய் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் பாடல் ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட பாடல்களை எழுதியுள்ள பா. விஜய், ஸ்ட்ராபெரி, ஆருத்ரா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்தது இவர் ஜீவா நடிப்பில் அகத்தியா எனும் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஜீவா உடன் இணைந்து ராஷி கன்னா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மிஸ்டரி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏற்கனவே மேதாவி என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பிறகு அகத்தியா என்று தலைப்பு மாற்றி வைக்கப்பட்டது. பா. விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'அகத்தியா'.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படம் 2025 ஜனவரி மாதம் 31ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ