விக்ரம் பிரபுவின் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் அத்வைத் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். வில்லனாக தனஞ்செயா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் விவேக் பிரசன்னா, ராம வேல் மூர்த்தி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மகாலட்சுமி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் மணி ஷர்மா மகன் மஹதி ஸ்வர சாகர் இதற்கு இசையமைத்துள்ளார்.
இது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ஒரு ஆக்சன் திரில்லர் படமாகும்.
இந்தப் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தது.
அதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் இப்படம் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.