Homeசெய்திகள்சினிமாபஹல்காம் காஷ்மீரின் இதயம்.... அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.... 'அமரன்' பட இயக்குனர் கண்டனம்!

பஹல்காம் காஷ்மீரின் இதயம்…. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…. ‘அமரன்’ பட இயக்குனர் கண்டனம்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி.பஹல்காம் காஷ்மீரின் இதயம்.... அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.... 'அமரன்' பட இயக்குனர் கண்டனம்! அதைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று (ஏப்ரல் 22) ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எதிராக பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி, “பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல், மனித குலம் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு கடுமையான பேரடியாகும். அழகான பஹல்காம் ஆண்டுதோறும் இரண்டு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். பஹல்காம் காஷ்மீரின் இதயம் போன்றது. அமரன் படப்பிடிப்பின் போது அற்புதமான நினைவுகள் இருந்தன. அங்குள்ள மக்கள் சுற்றுலா பயணிகளிடம் மிகவும் அன்புடன் நடந்து கொண்டனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ