Homeசெய்திகள்சினிமாபக்கா ஃபேன் பாய் சம்பவம்.... 'குட் பேட் அக்லி' ட்விட்டர் விமர்சனம்!

பக்கா ஃபேன் பாய் சம்பவம்…. ‘குட் பேட் அக்லி’ ட்விட்டர் விமர்சனம்!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் ட்விட்டர் விமர்சனம்.பக்கா ஃபேன் பாய் சம்பவம்.... 'குட் பேட் அக்லி' ட்விட்டர் விமர்சனம்!

அஜித்தின் 63வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் இப்படம் இன்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்த படம் காலை 7 மணி முதல் திரையிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் திரையிடப்படுகிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் படத்தைக் காண கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு திரண்டு வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் சிலர் இந்த படம் குறித்த தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

. அந்த வகையில் ரசிகர் ஒருவர், “இது பக்கா ஃபேன் பாய் சம்பவம். அஜித் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் வேற லெவலில் இருக்கிறது. ஆதிக் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்கள் வேற லெவலில் இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அருமை. அஜித்தின் தோற்றங்கள் ஒவ்வொரு ரசிகர்களையும் கனவு. தியேட்டர் அனுபவத்தை தவற விடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “நீண்ட இடைவெளிக்கு பிறகு எனர்ஜெடிக்கான, ஃபன் பண்ற அஜித்தை பார்க்க முடிகிறது. இது பியூர் ஒன் மேன் ஷோ. அர்ஜுன் தாஸ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெறுகிறார். பின்னணி இசை அதிக சத்தமாக இருந்தாலும் மாஸ் காட்சிகளை பூர்த்தி செய்கிறது. இந்த படத்தில் வலுவான அதையும், எமோஷனலும் இல்லை. பில்டப் மற்றும் ஸ்லோ மோஷன் நிறைந்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம்” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அடுத்தது, “இது தரமான ஃபேன் பாய் சம்பவம். இந்த படம் ஒரு மாஸ் என்டர்டெயினர் படம். அஜித் ரசிகர்களை ஈர்க்கிறது. ஏகே தோன்றும் காட்சிகள் சுவாரஸ்யமாகவும், நாஸ்டால்ஜிக்காகவும் இருக்கிறது. அனைவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அர்ஜுன் தாஸ் இரட்டை வேடங்களில் மிரட்டியுள்ளார். இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்தின் ஒவ்வொரு துளியையும் உயர்த்துகிறது. திரையரங்கில் பாடல்கள் சரவெடியாய் வெடிக்கிறது. இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் ரசிகர்களை கவர்கிறது. முதல் பாதிக்குப் பிறகே படம் ஆரம்பித்தாலும், அதன் பிறகு சூடு பிடிக்கிறது. கதைக்களம் எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை. ஒட்டுமொத்தமாக நல்ல படம். சமீபத்தில் வெளியான அஜித் படங்களில் இது சிறந்தது” என்று மற்றுமொரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

MUST READ