Homeசெய்திகள்சினிமாவிமல் நடிக்கும் சார் திரைப்படம்... நாளை முதல் பாடல் ரிலீஸ்....

விமல் நடிக்கும் சார் திரைப்படம்… நாளை முதல் பாடல் ரிலீஸ்….

-

விமல் நடிப்பில் உருவாகி வரும் சார் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகிறது.

கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விமல். இவர் தொடக்கம் முதலே கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு, இயக்குனர் சரவணசக்தி இயக்கத்தில் குலசாமி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். MIK ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த படம் கலையான விமர்சனத்தை பெற்றது. இதனிடையே விலங்கு எனும் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.இதில் விமலுடன் இனியா, முனீஸ் காந்த், ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

புலனாய்வு திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த வெப் தொடர் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தேசிங்கு ராஜா 2 மற்றும கலகலப்பு 3 என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், சார் என்ற புதிய திரைப்படத்திலும் விமல் நடித்திருக்கிறார். இப்படத்தை பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கி இருக்கிறார். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும், எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் கம்பெனியும் இணைந்து தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தின் அறிவிப்பு மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சார் படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்த
பாடலை நாளை வெளியிடுகிறார்.

MUST READ