Homeசெய்திகள்சினிமாடான்சிங் ரோஸ் நடிக்கும் பர்த் மார்க்... இரண்டாவது பாடல் ரிலீஸ்...

டான்சிங் ரோஸ் நடிக்கும் பர்த் மார்க்… இரண்டாவது பாடல் ரிலீஸ்…

-

டான்சிங் ரோஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் பர்த் மார்க் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் ஷபீர். இப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இப்படத்தை தொடர்ந்து த்ரிஷா நடித்த ரோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, ஷபீர் நடிப்பில் உருவாகும் புதிய படம் பர்த் மார்க். இயக்குநர் விக்ரம் ஸ்ரீரன் இப்படத்தை இயக்கி எழுதியிருந்தார். இவருக்கு ஜோடியாக படத்தில் மிர்னா நடிக்கிறார். இவர் ஜெயிலர் படத்தில் வசந்த் ரவிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கும் படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார். மிஸ்ட்ரி டிராமாவாக இத்திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. 90-களில் நடக்கும்படியாக கதையை அமைத்துள்ளனர். பெண்கள் அனுபவிிக்கும் மனரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை இப்படம் வெளிக்காட்டுவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடல் சமூக வலைதலங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

MUST READ