பராசக்தி படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயன் தவிர அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கடந்த 1965ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படப்பிடிப்புகளும் மதுரை, சிதம்பரம், காரைக்குடி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பேருந்து ஒன்றில் இந்தி வாழ்க எனும் வாசகம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. மற்றொரு பேருந்தில்,