Homeசெய்திகள்சினிமாபரிதாபங்கள் கோபி - சுதாகர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

பரிதாபங்கள் கோபி – சுதாகர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

-

- Advertisement -

பரிதாபங்கள் கோபி – சுதாகர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.பரிதாபங்கள் கோபி - சுதாகர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

இன்றுள்ள காலகட்டத்தில் உலகில் உள்ள பலரும் யூடியூப் சேனல்களின் மூலமும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பலரும் யூடியூபில் ட்ரண்டாகி தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றனர். அதில் கிஷன் தாஸ், ஹரி பாஸ்கர், பாரத் ஆகியோர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலின் மூலம் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கோபி – சுதாகர் ஆகிய இருவரும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் படம் எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கோபி – சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஓ காட் பியூட்டிஃபுல் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக டைட்டில் டீசர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தை விஷ்ணு விஜயன் இயக்குவதாகவும் சக்திவேல் மற்றும் ஸ்ரீ கார்த்திக் ஆகியோர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிப்பதாகவும் அறிவித்துள்ளனர். தற்போது இந்த டைட்டில் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ