ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இதில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனமும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு இசை அமைத்துள்ளார்.
சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது
இந்நிலையில், பார்க்கிங் படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 1-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.